நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடிய வாகனங்களுக்கு 50% வரி உயர்வு: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்:

கனடிய வாகனங்களுக்கான இறக்குமதி வரியை 50 விழுக்காட்டிற்கு உயர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடப்புக்கு வரும் புதிய வரி வாகன உதிரிபாகங்களுக்கும் பொருந்தும் என்றார் அவர்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அமெரிக்கா தற்போது 25 விழுக்காடு வரி விதிக்கிறது.

கனடா அமெரிக்காவை ஏமாற்றிப் பணம் பறிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கனடியப் பொருள்களுக்கு அமெரிக்கா சனிக்கிழமை 50 விழுக்காடு இறக்குமதி வரி விதித்தது.

பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் சில பொருள்களுக்கு வரி விதிக்கப்போவதாக கனடாவும் அறிவித்தது.

கனடிய வாகனங்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்று கூறியுள்ளார் கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney).

ஆனால் அத்தகைய நடவடிக்கை அமெரிக்க வேலைவாய்ப்புகளையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
 
ஆதாரம்: CNA

​​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset