செய்திகள் உலகம்
275 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 1500 பேரை காணவில்லை: நேபாள வெளியுறவு அமைச்சர் தகவல்
காட்மாண்டு:
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த சுமார் 1500 பேரை காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 275 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1500 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக நேபாள நாட்டின் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “இதுவரை 275 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை காணவில்லை. தற்போதைய தகவலின்படி, 28 நாடுகளைச் சேர்ந்த 1476 பேரை காணவில்லை. இந்த எண்ணிக்கை ஆய்வுக்கு உட்பட்டது.
நேபாள வெள்ள பாதிப்பு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், ”ரசுவா பகுதியில் மட்டும் இந்த துயரச் சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. தற்போது அவர்களில் பலர் காணாமால் போயுள்ளனர். இந்த பேரிடரின் முழு அளவை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 8:54 pm
நேப்பாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 17 பேர் உயிரிழந்தனர்
August 25, 2026, 1:39 pm
கனடிய வாகனங்களுக்கு 50% வரி உயர்வு: டிரம்ப் மிரட்டல்
August 25, 2026, 1:32 pm
சீனா, வியட்நாமில் நாரா சூறாவளி சீற்றம்: கடுமையான வெள்ளம்
August 25, 2026, 11:17 am
பட்டானியில் மற்றொரு தாக்குதல்: மளிகைக் கடை குறிவைக்கப்பட்டது
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
