செய்திகள் உலகம்
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
சிங்கப்பூர்:
உலகம் மேலும் போட்டி நிறைந்ததாகவும், நிலையற்றதாகவும், ஆபத்தானதாகவும் மாறிவருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தம்முடைய தேசிய தினக் கூட்ட உரையில் தெரிவித்துள்ளார்.
அது தற்காலிகமானது அல்ல என்றார் அவர். தேசிய தினத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்
1) பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு அதிகரிக்கிறது
-- ஒரு பிள்ளை இருந்தால் 8 நாள்கள்
-- 2 பிள்ளைகள் இருந்தால் 10 நாள்கள்
-- 3 அல்லது அதற்க்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தால் 12 நாள்கள்
2) குழந்தைகளுக்குக் கூடுதல் நிதியுதவி
அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறக்கும்போது 10,000 வெள்ளி ரொக்க அன்பளிப்புக் கொடுக்கப்படும்.
ஒரு வயது முதல் 16 வயது வரை ஆண்டுதோறும் 2,000 வெள்ளி உதவித்தொகையும் வழங்கப்படும்.
மொத்தம் $32,000.
பிள்ளைகள் 17 வயதை எட்டியதும் உயர்நிலைக்குப் பிந்திய கல்விக் கணக்கில் (PSEA) 10,000 வெள்ளி நிரப்பப்படும்.
3) சிசு, குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டணம் 2030ஆம் ஆண்டுக்குள் குறையும்
சிசுப் பராமரிப்பு நிலையங்களில் முழு நாள் பராமரிப்புக்கு மாதக் கட்டணம் 300 வெள்ளியாகக் குறையும்.
குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் கட்டணம் 150 வெள்ளியாகக் குறையும்.
4) சமூக ஊடகத்திலிருந்து இளையர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள்
சிங்கப்பூரில் 10 முதல் 24 வயதுள்ள இளையர்களில் 6இல் ஒருவர், சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் அறிகுறிகள் உள்ளன
சிலருக்கு இந்தப் பிரச்சினை கடுமையாக இருக்கிறது.
விளம்பரம்
சமூக ஊடகப் பாதுகாப்பு போதாவிட்டால் தளங்களைப் பயன்படுத்தும் குறைந்தபட்ச வயது 13க்கு மேல் உயர்த்தப்படலாம்
5) வீடு வாங்குவதற்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது
BTO அதாவது தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளை வாங்க வருமான உச்சவரம்பு 14,000வெள்ளியிருந்து 16,000 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது.
எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளை வாங்க வருமான உச்சவரம்பு 16,000 வெள்ளியிருந்து 18,000 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது.
5) செமாக்காவ், புக்கோம், சுடோங் உள்ளிட்ட சில தீவுகளை இணைத்துப் புதிய மேற்குத் தீவை உருவாக்கத் திட்டம்
பெட்ரோலிய ரசாயனம், அதிநவீன உற்பத்தி, மின் உற்பத்தி முதலிய பல துறைகளுக்குப் புதிய தீவு நடுவமாக இருக்கும்.
6) செந்தோசாவையும் புலாவ் பிரானியையும் மெருகேற்றப் புதிய திட்டம்
செந்தோசாவின் மேற்குக் கரையைப் பொதுமக்களுக்குத் திறக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
புலாவ் பிரானியில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் புதிய Downtown South உல்லாசத் தலம் கட்டப்படும்.
நிலமீட்பு மூலம் புலாவ் பிரானி செந்தோசாவுடன் இணைக்கப்படும்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
