நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனா, வியட்நாமில் நாரா சூறாவளி சீற்றம்: கடுமையான வெள்ளம்

ஹோசி மின் சிட்டி:

சீனா, வியட்நாமில் நாரா சூறாவளி சீற்றம்: கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அவ்விரு நாடுகளிலும் இடைவிடாமல் கனமழை பெய்தது.

சீனாவின், தெற்கு குவாங்சி (Guangxi) மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சுமார் 54,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

8,087 பேர் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாளை வரை சீனாவின் பல்வேறு வட்டாரங்களில் கனத்த மழை தொடரலாம்.

வியட்நாமிலும் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் மாண்டார்.

4,300க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 55,000 வீடுகளில் மின்சாரம் இல்லை.

வெள்ளத்தில் 10,000 ஹெக்டருக்கும் அதிகமான நெல்லும் மற்ற பயிர்களும் அழிந்துவிட்டன.

வியட்நாமின் குவாங் நின் (Quang Ninh) வட்டாரத்தில் அமைந்துள்ள ஹா லாங் பே (Ha Long Bay) உலக மரபுடைமைத் தலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா, மீன்பிடித்தொழில், போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

- அக்பர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset