நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேப்பாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 17 பேர் உயிரிழந்தனர்

காட்மாண்டு:

நேப்பாளம்-திபெத் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் இதுவரை 17 பேர் மாண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 400 பேரைக் காணவில்லை.

இன்று அதிகாலை நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே உள்ள ராசுவா பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதனால் உருகிய பனி, போத்தே கொஷி ஆற்றில் பெருமளவில் கலந்து வெள்ளத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

சாலைகள், பாலங்கள், மின்சாரக் கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்தன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.

ஆனால், வெள்ளநீர் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் அவை தரையிறங்க முடியவில்லை.

காவல்துறையும் ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset