நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடர் மீட்புப் பணிகளுக்குப் மலேசியத் தீயணைப்பு படை தயார் 

கோலாலம்பூர்: 

நேபாளத்திற்குச் சென்று பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில்  ஈடுபட மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முற்றிலும் ஆயத்தமாக உள்ளது.

நாட்டின் மிகச் சிறந்த 'ஸ்டார்ம்' (STORM) சிறப்புத் தந்திரோபாயப் படையை அனுப்பத் துறை தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கோரிக்கை மற்றும் வெளியுறவு அமைச்சு, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பொறுத்தே இந்த நடவடிக்கை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது இதனை உறுதிப்படுத்தினார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகளுக்கு சர்வதேச உதவி தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதில் மலேசியாவின் அனுபவமிக்க 'ஸ்டார்ம்' படை பெரும் பங்காற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க அமைப்புகளுக்கு இடையிலான உயர்மட்ட ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பச்சைக்கொடி காட்டப்பட்டவுடன் படைகள் புறப்படும் என்றும் கூறப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset