நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜி விவகாரம்: முன்னாள் தலைவர் & தலைமை செயலாளர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு 

கோலாலம்பூர்: 

தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக, தபோங் ஹாஜியின் முன்னாள் தலைவராக இருந்த அரசியல்வாதி ஒருவரும் முன்னாள் தலைமை செயலாளரும் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்ராஜெயா மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் எம்.ஏ.சி.சி செய்த விண்ணப்பத்தை ஏற்று, மாஜிஸ்டிரெட் எஸ்ஸ்ரீன் ஸக்காரியா இந்தத் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

இவ்விருவரும் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு தாபோங் ஹாஜி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியை (CEO) ஊழல் தடுப்பு ஆணையம் 7 நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்திருந்தது.

2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தாபோங் ஹாஜியின் மேலாண்மை, செயல்பாடுகள் மற்றும் சொத்து நிர்வாகம் குறித்து ஆராயவே இந்த RCI ஆணையம் அமைக்கப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் இந்த அதிரடி விசாரணைகள், நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset