செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும்: அப்துல் ரவுஃப் உறுதி
மலாக்கா:
மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி 21 இடங்களையும் தக்கவைத்து கொள்ளும் என்று மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோப் கூறினார்.
இந்த 21 தொகுதிகளிலும் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் இடமில்லை என்றும், பிற கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதன்மை நிபந்தனை இதுவே என்றும் மலாக்கா தேசிய முன்னணி தலைவர் அப் ரவுஃப் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
எனினும், எந்தவொரு பேச்சுவார்த்தையும் நியாயமான அடிப்படையில் அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
வரும் செப்டம்பர் மாதத்தில் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்ற வதந்திகள் குறித்துக் கேட்டபோது, சட்டமன்றக் கலைப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்
மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலாக்காவில், 15-வது மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 21 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
அந்தத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் ஐந்து தொகுதிகளையும், பெரிகாத்தான் நேஷனல் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:23 am
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடர் மீட்புப் பணிகளுக்குப் மலேசியத் தீயணைப்பு படை தயார்
August 28, 2026, 11:22 am
புகைமூட்டம் காரணமாக தேசிய தின பிரதமர் உரை நிகழ்ச்சி புத்ராஜெயாவுக்கு மாற்றம்
August 28, 2026, 8:41 am
எம்ஏசிசியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ சரவணன் நீதிமன்றத்தில் ஆஜரானார்
August 27, 2026, 4:21 pm
தபோங் ஹாஜி விவகாரம்: முன்னாள் தலைவர் & தலைமை செயலாளர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 27, 2026, 4:12 pm
