நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம் காரணமாக தேசிய தின பிரதமர் உரை நிகழ்ச்சி புத்ராஜெயாவுக்கு மாற்றம்

கோலாலம்பூர்:

நாட்டின் தற்போதைய புகைமூட்ட நிலையைக் கருத்தில் கொண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தின பிரதம உரை நிகழ்ச்சி (Majlis Amanat Perdana) இடம் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி கோலாலம்பூர் மெர்டேகா சதுக்கத்திற்குப் பதிலாக புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்திற்குப் (PICC) மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டின் தேசிய தின மற்றும் மலேசிய தின விழா (HKHM) பணிக்குழு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
நிலவும் தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வசதியை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முதன்மை நோக்கமாகும்.
அதேவேளையில், இந்நிகழ்ச்சி எவ்வித தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெறுவதையும் இது உறுதி செய்யும் என பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சி நடக்கும் இடம் மாற்றப்பட்ட போதிலும், 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தின் நோக்கம் மற்றும் உற்சாகம் இதில் சிறிதும் குறையாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் விழாவை நடத்துவதற்கான பொறுப்பான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

நாட்டின் புகைப் மூட்ட நிலைமை மற்றும் காற்றின் தர மாற்றங்களை அரசு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. நிலைமைக்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேசிய தினக் கொண்டாட்டத்தின் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்துவது குறித்த இறுதி முடிவு தற்போதைய சூழலின் அடிப்படையில் எடுக்கப்படும். நிலைமையின் தீவிரத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset