செய்திகள் மலேசியா
எம்ஏசிசியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ சரவணன் நீதிமன்றத்தில் ஆஜரானார்
கோலாலம்பூர்:
முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் எம்ஏசிசியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக சற்று நேரத்திற்கு முன்பு கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஆஜரானார்.
அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூடினர்.
பல நபர்கள் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியதால், நீதிமன்ற வளாகத்தின் பிரதான வாயிலுக்கு முன்னால் சூழல் சற்று பதட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிமன்றப் பணியாளர்கள் என்று நம்பப்படும் நபர்கள் அவர்களை உள்ளே அனுமதித்ததால் நிலைமை மீண்டும் அமைதியானது.
இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்படுவேன் என்று சரவணன் உறுதிப்படுத்தியதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
2022-ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்றின் போது வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய விவகாரத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திய ஒரு மூன்றாம் தரப்பு அறிக்கையின் அடிப்படையில், தான் எதிர்கொள்ளவிருக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:23 am
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடர் மீட்புப் பணிகளுக்குப் மலேசியத் தீயணைப்பு படை தயார்
August 28, 2026, 11:22 am
புகைமூட்டம் காரணமாக தேசிய தின பிரதமர் உரை நிகழ்ச்சி புத்ராஜெயாவுக்கு மாற்றம்
August 27, 2026, 5:12 pm
மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும்: அப்துல் ரவுஃப் உறுதி
August 27, 2026, 4:21 pm
தபோங் ஹாஜி விவகாரம்: முன்னாள் தலைவர் & தலைமை செயலாளர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 27, 2026, 4:12 pm
