செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோலாலம்பூரில் உள்ள நேபாள தூதரகம் நிவாரண நன்கொடைகளைக் கோருகிறது
கோலாலம்பூர்:
போத்தே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, ரசுவா, நுவாகோட், தாடிங் மற்றும் கோர்கா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், நேபாள அரசாங்கம் தேடுதல், மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
உடனடி உதவிகளை வழங்கவும், சேதங்களை மதிப்பிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட நபர்களை இடம்பெயரச் செய்வதற்கும், மறுவாழ்வு அளிப்பதற்கும் நிதியுதவி வழங்குமாறு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
மலேசியாவில் உள்ள நேபாள நாட்டினர், அரசு சாரா அமைப்புகளிடமிருந்து பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.
ராஷ்ட்ரிய பாணிஜ்யா வங்கி, நேபாள வங்கி லிமிடெட் ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட கணக்குகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம்.
அல்லது கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் (ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு எதிரில்) உள்ள நேபாள நாட்டின் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:23 am
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடர் மீட்புப் பணிகளுக்குப் மலேசியத் தீயணைப்பு படை தயார்
August 28, 2026, 11:22 am
புகைமூட்டம் காரணமாக தேசிய தின பிரதமர் உரை நிகழ்ச்சி புத்ராஜெயாவுக்கு மாற்றம்
August 28, 2026, 8:41 am
எம்ஏசிசியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ சரவணன் நீதிமன்றத்தில் ஆஜரானார்
August 27, 2026, 5:12 pm
மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும்: அப்துல் ரவுஃப் உறுதி
August 27, 2026, 4:21 pm
தபோங் ஹாஜி விவகாரம்: முன்னாள் தலைவர் & தலைமை செயலாளர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 27, 2026, 4:12 pm
