செய்திகள் மலேசியா
தன்னைச் சிக்கவைக்க சாட்சிகளை எம்ஏசிசி மிரட்டியதாகக் கூறி பிரதமருக்குக் கடிதம்; என் மீதான அடிப்படையற்ற வழக்கை சந்திக்க தயார்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
தனக்கு எதிராக எம்ஏசிசி சுமத்தியுள்ள அப்பட்டமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.
தன்னை இதில் சிக்கவைக்க சில நபர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 24ஆம் தேதியிட்டப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் பணியில் தானோ அல்லது தனது குடும்பத்தினரோ தனிப்பட்ட முறையில் ஈடுபடவில்லை என்று முன்னாள் மனிதவளத்துறை அமைச்சரான சரவணன் கூறியுள்ளார்.
இரண்டு தொழிலதிபர்கள் கைது
வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தியது தொடர்பாக இரண்டு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் இந்த ஆண்டு ஜூலை 28 அன்று காலமானார். மற்றொருவர் நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படுகிறார்.
சில தரப்பினரின் தீய நோக்கங்களுடன் என் பெயரைத் தொடர்புபடுத்துவதற்காக மட்டுமே, இந்த இரண்டு நபர்களும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக வாக்குமூலம் அளிக்க நிர்பந்திக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
மரணமடைந்த சைட் அமிருல் என்று மட்டும் அடையாளம் காணப்பட்ட அவர் நான்கு நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
மேலும், எம்ஏசிசி தனது மனைவியைக் கைது செய்வதாக மிரட்டியதாகவும் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இரண்டாவது சந்தேக நபர், தன்னைக் குற்றவாளியாக்கும் வாக்குமூலம் அளிக்க மறுத்ததால் ஆறு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும், காவலில் இருந்தபோது டயாலிசிஸ் சிகிச்சை பெறவும் அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
இரண்டாவது சந்தேக நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
சைட் அமிருல் 10,000 ரிங்கிட் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டவுடன், அவரும் அவரது மனைவியும் அவதூறான அறிக்கையைத் திருத்த முயன்றனர்,
ஆனால் எம்ஏசிசி அதிகாரிகள் அவர்களை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தனர்.
தங்கள் வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில், சைட் அமிருலும் அவரது மனைவியும் 2022 செப்டம்பர் 22ஆம் தேதியன்று சத்தியப்பிரமாண ஆணையர் முன் ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். அதன் நகல் எம்ஏசிசிக்கும் வழங்கப்பட்டது.
தவறுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, எம்ஏசிசி 2023 ஜூன் 26 அன்று, பிணைப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததுடன், எனக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இந்த வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், கடந்த ஆண்டு நவம்பரில் சைட் அமிருலையும் அவரது மனைவியையும் மீண்டும் விசாரணைக்கு எம்ஏசிசி அழைத்ததாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டு, சைட் அமிருலும் அவரது மனைவியும், 2022-ல் அளித்த வாக்குமூலத்தை (சரவணனைக் குற்றவாளியாக்கத் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக) மீண்டும் உறுதிப்படுத்த, மற்றொரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்து மேலும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, சைட் அமிருல் 2026 ஜூலை 28 அன்று காலமானார்.
இப்போது, முக்கிய சாட்சி இல்லாத நிலையில் எம்ஏசிசி எனக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர முயற்சிப்பதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.
நடவடிக்கை இல்லை, ஆனால்…
நவம்பர் 2025 முதல் டத்தோஸ்ரீ அன்வாருடன் பலமுறை கலந்துரையாடியதாகவும், அப்போது பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தனக்கு உறுதியளித்ததாகவும் டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
இருப்பினும் எம்ஏசிசி திடீரென எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை விசாரணையைத் தொடங்கியிருப்பது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
பிரதமரே உங்கள் தகவலுக்காக, இந்த வழக்கு முற்றிலும் ஆதாரமற்றது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நேர்மையைப் பாதுகாக்க உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒருவிதமான துன்புறுத்தல், தீய நோக்கங்களைக் கொண்டது என்பதை டத்தோஸ்ரீ அன்வார் மிகவும் அக்கறையுடனும் விழிப்புடனும் இருப்பார் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:23 am
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடர் மீட்புப் பணிகளுக்குப் மலேசியத் தீயணைப்பு படை தயார்
August 28, 2026, 11:22 am
புகைமூட்டம் காரணமாக தேசிய தின பிரதமர் உரை நிகழ்ச்சி புத்ராஜெயாவுக்கு மாற்றம்
August 28, 2026, 8:41 am
எம்ஏசிசியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ சரவணன் நீதிமன்றத்தில் ஆஜரானார்
August 27, 2026, 5:12 pm
மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி 21 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும்: அப்துல் ரவுஃப் உறுதி
August 27, 2026, 4:21 pm
தபோங் ஹாஜி விவகாரம்: முன்னாள் தலைவர் & தலைமை செயலாளர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 27, 2026, 4:12 pm
