நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் ஒற்றுமை, மக்கள் மத்தியில் அமைதியை உறுதி செய்ய பொது நிறுவனங்களின் பங்கும் சேவையும் அளப்பரியதாகும்: யுனேஸ்வரன்

கோலாலம்பூர்:

நாட்டின் ஒற்றுமை, மக்கள் மத்தியில் அமைதியை உறுதி செய்ய பொது நிறுவனங்களின் பங்கும் சேவையும் அளப்பரியதாகும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் இதனை கூறினார்.

மலேசியா பல இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாசாரங்கள் கொண்ட தனித்துவமான நாடாக விளக்கப்பட்டது.

ஒற்றுமை என்பது வெறும் அரசாங்கக் கொள்கை அல்லது கோஷம் அல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய பொறுப்பாகும்.

குடும்பங்கள், பள்ளிகள், சமூகங்களில் ஒற்றுமை, பரிவு, மரியாதை உரையாடல் ஆகியவை வளர்க்கப்பட வேண்டும்.

சந்தேகத்திற்குப் பதிலாக பரிவு, பிரிவினைக்குப் பதிலாக உரையாடல், அலட்சியத்திற்குப் பதிலாக மரியாதை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கை வளரும் போது வாய்ப்புகள் அதிகரித்து, பொருளாதாரமும் சமூகங்களும் முன்னேறும்.

ஒற்றுமை பலவீனமானால் சிறிய தவறான புரிதல்கள்கூட பெரிய பிளவுகளாக மாறலாம்.

எந்த சமூகமும் புறக்கணிக்கப்பட்ட உணரக்கூடாது என்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்கு பொது நிறுவனங்கள், வணிகத் துறை மற்றும் அரசு சாரா அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.

நிறுவனங்கள் சமத்துவமான வேலைவாய்ப்பையும் உள்ளடக்கிய பணியிடங்களையும் உருவாக்க வேண்டும்.

அரசு சாரா அமைப்புகள் அடித்தள மக்களிடையே பாலமாக இருந்து நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் போன்ற நல்ல புள்ளிவிவரங்கள் மட்டுமே போதாது.

நாட்டின் வளர்ச்சியின் பயன் சமூகத்தின் கடைசி நபரையும் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Harmony Madani Social முயற்சி, பல்வேறு சமூகங்கள், மதங்களைச் சேர்ந்த மக்களிடையே புரிதல், உரையாடல், நல்லிணக்கத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியாகக் பாராட்டுக்குரியது.

மேலும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த கோலாலம்பூர் பொருளாதார கிளப்பின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் அவரின் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்று துணையமைச்சர் யுனேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset