நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாளப் பேரழிவுத் துயரம்: அம்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை: மகள் உருக்கத்துடன் உதவி கோருகிறார்

கோலாலம்பூர்:

நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு, பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, ஒரு மலேசியப் பெண்ணைத் தொடர்புகொள்ள முடியாததால், அவர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இங்குள்ள பங்சாரில் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் 56 வயதான கோமதி சித்தோரலிங்கம், நேற்று காலை சுமார் 9 மணியளவில் தனது 31 வயதான மகன் தரினிய தியாகராஜனை குறுஞ்செய்தி சேவை மூலம் கடைசியாகத் தொடர்பு கொண்டார்.

தானும் தனது குழுவினரும் அந்த நேரத்தில் ஒரு பாலத்திற்கு அருகில் உள்ள திபெத்திய எல்லைக் கடக்கும் இடத்தில் இருந்ததாகவும், அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக முன்கூட்டியே அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் தனது தாய் தன்னிடம் தெரிவித்ததாக தரினியா கூறினார்.

காலை சுமார் 9 மணியளவில் அவர்கள் பாலத்திற்கு அருகில் திபெத்திய எல்லையில் இருந்ததாகவே கடைசியாகத் தகவல் கிடைத்தது.

நிலச்சரிவு காரணமாக அவர்கள் திபெத்திய எல்லைப் பகுதியை முன்கூட்டியே விட்டுச் சென்றுவிட்டதாக நேற்றைய கடைசிச் செய்தி தெரிவித்தது, என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, கோமதியின் குடும்பத்தினர் அவரது உடல்நலம், பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளனர். 

மேலும், உதவி கோருவதற்கும் சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்கும் அவர்கள் வெளியுறவு அமைச்சில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset