செய்திகள் உலகம்
இனப்படுகொலையில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட்: துருக்கி அதிரடி
அங்காரா:
காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்த சம்பவத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.
காசா எல்லை முற்றுகையை உடைத்து உதவிகளை வழங்க மே மாதத்தில்'குளோபல் சமுத் ஃப்ளோட்டிலா அமைப்பைச் சேர்ந்த 50 கப்பல்கள் துருக்கியிலிருந்து புறப்பட்டன. சர்வதேச கடல் எல்லையில் 430 தொண்டு ஊழியர்களுடன் பயணித்த இந்த உதவி கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து இடைமறித்தது.
அதில் இருந்த தொண்டு ஊழியர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியதுடன் பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

இச்சம்பவம் குறித்துத் துருக்கி நீதித் துறை அமைச்சர் அகின் குர்லெக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ஜூலை 14 அன்று பிறப்பிக்கப்பட்ட கைது வாரன்டின் அடிப்படையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலைச் சேர்ந்த அஃபெக் மொஸ்கோவிச் ஆகிய இருவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு துருக்கி நீதித் துறை முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சட்டவிரோதக் காவல், சித்திரவதை, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் கப்பல்களைக் கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
