நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.5 ஆக வளர்ச்சி அடையும்: நிதியமைச்சர் நம்பிக்கை

கோலாலம்பூர்:

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் நடப்பு 2022ஆம் ஆண்டு 5.5 முதல் 6.5 விழுக்காடு என்ற இலக்கை எட்டிப்பிடிக்கும் என்று நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சியைப் பதிவு செய்வதற்கான நேர்மறை, சாதகமான அறிகுறிகள் தென்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நாட்டில் தற்போது குறைந்து வரும் வேலை வாய்ப்பின்மை விகிதம் உள்ளிட்ட அம்சங்கள் மேற்குறிப்பிட்ட வளர்ச்சியை பதிவு செய் கைகொடுக்கும் என்றார் அவர்.

"பெருந்தொற்று எதிரான போராட்டம் நீடித்து வருகிறது என்ற போதிலும் நடப்பு 2022 என்பது தேசிய பொருளாதார மீட்சிக்கான ஆண்டாக இருக்கும். 2022-க்கான நிதிநிலை அறிக்கையில் இதற்காக 322 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே மலேசியாவின் ஆகப்பெரிய நிதிநிலை அறிக்கை.

"மக்கள் நலன், வீழ்ந்து கிடக்கும் தொழில், பொருளாதாரத் துறைகளை மீட்டெடுப்பதில்தான் அரசாங்கத்தின் கவனம் இருக்கும். இதன் மூலம் நாடு மேலும் வளம்பெறும்," என்று தொலைக்காட்சி பேட்டியில் பங்கேற்றபோது நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

MoF: Malaysia's GDP expected to grow 5.5-6.5 pct in 2022

நேர்மறை அறிகுறிகளாக அவர் குறிப்பிட்டவற்றில் தொழில் சந்தையும் ஒன்றாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 705,000 ஆக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை நவம்பர் மாதம் 694,400 ஆக குறைந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதேபோல் தொழில் உற்பத்தி குறியீடும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9.4% ஆக அதிகரித்துள்ளது என்றும், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகமும் கூட வளர்ச்சி கண்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset