
செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் - மெல்பர்ன் விமானச் சேவையை நிறுத்தவிருக்கும் எமிரேட்ஸ்
சிங்கப்பூர்:
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னுக்கும் இடையிலான விமானச் சேவைகளை துபாயின் எமிரேட்ஸ் நிறுவனம் நிறுத்த இருக்கிறது.
சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் அதன் இறுதி மதிப்பீட்டை வெளியிட்டதும் சேவை நிறுத்தப்படும் நாள் தீர்மானிக்கப்படும் என்றும் எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவின் மற்றொரு நகரமான பிரிஸ்பனுக்கும் இடையிலான விமானச் சேவையை நிறுத்த அந்நிறுவனம் 2019ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்தது.
சிங்கப்பூர் - மெல்பர்ன் இடையிலான விமானச் சேவை 1996ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.
கோவிட்-19 நெருக்கடி நிலையின்போது மட்டும் அது மூன்று ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான விமானச் சேவை தொடரும் என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
நாள் தோறும் நான்கு விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று அது கூறியது.
மெல்பர்னிலிருந்து நேரடியாக துபாய்க்குச் செல்லும் விமானச் சேவை நாள்தோறும் இரண்டு முறை வழங்கப்படும் என்று எமிரேட்ஸ் தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm