
செய்திகள் வணிகம்
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்தியா கேட் உணவகம் 10ஆவது கிளை திறப்பு
பெட்டாலிங் ஜெயா:
மலேசியாவின் புகழ்பெற்ற இந்திய உணவக சங்கிலியான இந்தியா கேட், தனது 10ஆவது கிளையை வியப்பூட்டும் முறையில் திறந்து வைத்தது.
இது உணவக வரலாற்றில் முக்கியமான மைல்கல், ஏனெனில் இந்த உணவகம், ஒரே ஆண்டில் அதிகளவிலான ரொட்டி நான், மற்றும் பிரியாணி விற்றதற்காக மலேசிய சாதனை புத்தகத்தில் புகழ் பெற்றுள்ளது.
திறப்பு விழாவை மேலும் சிறப்பிக்க, உரிமையாளர் சரவணனின் தாயார் நெகிழ்ச்சியுடன் ரிப்பன் வெட்டி கிளையை திறந்தார். இந்நிகழ்வை கொண்டாடும் விதமாக 1000 பேருக்கு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டன.
அன்றைய தினம் மக்கள் கூட்டம் அலைமோதியது, உணவகத்தின் புகழ் வெற்றிகரமாக வளர்ந்ததைப் பிரதிபலிக்கிறது. வரிசையில் காத்திருந்த மக்கள், இந்த நிகழ்வை உல்லாசமாகக் கொண்டாட, இந்தியா கேட் உணவகத்தின் மேன்மையான சுவைகளுக்கு மகத்தான ஆதரவை வழங்கினர்.
தமது சாதனையை முன்னிட்டு உரிமையாளர் சரவணன் , "இந்த வெற்றியின் பின்புலம் அனைத்துப் பணியாளர்களின் கடின உழைப்பும், எங்களின் வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவுமே," என்று குறிப்பிட்டு, அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்கினார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm