செய்திகள் உலகம்
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
ஸ்டோக்ஹொம்:
சுவீடன் நாட்டில் உள்ள ஃபாகெர்ஸ்டா நகரில் அமைந்துள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் வாளைக் கொண்டு பயங்கர தாக்குதல் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்த கோரத் தாக்குதலில் ஒரு நபர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்திற்குக் காரணமான 18 வயதுடைய நபர் ஒருவரை உள்ளூர் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.
பள்ளியின் உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த மூவரில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
