செய்திகள் வணிகம்
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
கோவில்பட்டி:
மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கடலை மிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
கோவில்பட்டி கடலைமிட்டாய்கள் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதுகுறித்து, சங்கச் செயலாளர் கண்ணன் கூறியதாவது: நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.
பேக்கிங் கவர்களின் விலையும் அதிகரித்துள்ளது. 80 கிலோ நிலக்கடலை மூட்டை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.9,680 என விற்பனையானது.
தற்போது ரூ.12,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,300 என இருந்த 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் விலை தற்போது ரூ.2,600 ஆக விலை உயர்ந்துள்ளது.
ஏலக்காய் கிலோ ரூ.2,200-ல் இருந்து ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடலை மிட்டாய் தயாரிப்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க, கடலை மிட்டாய் விலையை, தற்போதைய விலையிலிருந்து 25 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
