செய்திகள் உலகம்
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பாரிஸ்:
ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக குறைந்தது 30,000க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை நடுப்பகுதிக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 32,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய எட்டு முக்கிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட ஆய்வுகளில், வெப்பம் காரணமாக நேரடியாக 33,000 இறப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
யூரோமோமோ அமைப்பின் வாராந்திர அறிக்கையின்படி, ஜூன் மாதத்தின் கடைசி வாரம் மிகவும் மோசமானதாக இருந்தது.
அந்த வாரம் மட்டும் சுமார் 16,000 இறப்புகள் பதிவாகியுள்ளன; அதைத்தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் சுமார் 8,000 பேர் இறந்துள்ளனர்.
இந்த இரண்டு கால கட்டங்களிலும் ஐரோப்பாவில் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலை வீசியதுடன், பரவலான வறட்சியும் ஏற்பட்டு காடுகளில் காட்டுத்தீ பரவும் அபாயத்தை பலமடங்கு அதிகரித்தது.
ஐரோப்பாவை வாட்டி வதைத்து வரும் இந்த கடுமையான வெப்ப அலைக்கும் வறட்சிக்கும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
