செய்திகள் மலேசியா
அஸாம் பாக்கியை கைது செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை போராட்டம்
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
The Tangkap Azam Baki Committee-யின் 25 குழுக்கள் வரும் சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தலைநகரில் உள்ள சோகோ வணிக வளாகம் முன்பு ஒன்றுகூட உள்ளன.
போராட்டத்தில் பங்கேற்போர் அஸாம் பாக்கியை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்ற கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவர் எனக் கூறப்படுகிறது.
"உங்களால் (பொதுமக்கள்) இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணைய முடியவில்லை எனில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே கறுப்புக்கொடியைப் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
"மேலும், அனைவரும் தங்களது சமூக ஊடகப் பதிவுகளில் #TangkapAzamBaki and #RombakSPRM ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துமாறு கோருகிறோம்," என்று அந்த கமிட்டி இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மில்லியன் கணக்கான பங்குகளை அஸாம் பாக்கி தன்வசம் வைத்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
December 16, 2024, 7:08 pm
இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை மீண்டும் மஇகா பக்கம் திரும்பியுள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 16, 2024, 5:27 pm
இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்து தாய்லாந்து புறப்பட்டார் பேடோங்டர்ன் ஷினவத்ரா
December 16, 2024, 5:11 pm
நடுக்கடலில் மனைவியைக் காப்பாற்ற 5 மணி நேரம் நீந்திச் சென்ற கணவர்
December 16, 2024, 5:08 pm
4 மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர் கனமழை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
December 16, 2024, 5:07 pm
சபா மாநிலத்தின் ரானாவ் பகுதியில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
December 16, 2024, 5:06 pm
இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை மீண்டும் மஇகா பக்கம் திரும்பியுள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 16, 2024, 3:52 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடைமுறை தொடரும்: ஃபட்லினா சிடேக்
December 16, 2024, 3:51 pm
நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதே முதன்மை நடவடிக்கையாகும்: ரஸாருடின் ஹுசைன்
December 16, 2024, 3:17 pm
மஇகா தலைமையகத்தில் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்
December 16, 2024, 3:06 pm