செய்திகள் மலேசியா
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
தாப்பா:
பீடோர் சென்ட்ரலில் ஒரு கடைக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா அல்பார்ட் காரில் நேற்று இரவு ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தாப்பா மாவட்டக் போலிஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹசிம் இதனை கூறினார்.
இரவு சுமார் 8.56 மணியளவில், இன்ஜின், ஏர்கோண்ட் இயங்கிக்கொண்டிருந்த, ஜன்னல்கள் இறுக்கமாக மூடப்பட்டிருந்த, அனைத்துக் கதவுகளும் பூட்டப்பட்டிருந்த ஒரு கருப்பு நிற டொயோட்டா ஆல்ஃபார்ட் பல்நோக்கு வாகனம் குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், வாகனம் பூட்டப்பட்டிருந்ததும், அனைத்து ஜன்னல்களும் இறுக்கமாக மூடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் பல்நோக்கு வாகனத்தின் கதவைத் திறந்தனர்.
பரிசோதனையில், 20 வயதுகளில் உள்ள உள்ளூர் இளைஞர் ஒருவர் பல்நோக்கு வாகனத்தின் பின் இருக்கையில் சுயநினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவரின் உடலைப் பரிசோதித்ததில், காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
வாகனத்தில் அபாயகரமான ஆயுதங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
