செய்திகள் மலேசியா
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
கோலாலம்பூர்:
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட புகைமூட்டத்தைத் தொடர்ந்து, ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ள சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்லி அஹ்மத் இதனை கூறினார்.
32ஆவது, 33ஆவது தொற்றுநோயியல் வாரங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில், ஆஸ்துமா பாதிப்புகள் 259% அதிகரித்துள்ளதாகவும், சுவாசக்குழாய் தொற்று 124% அதிகரித்துள்ளது.
சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் 1,637-லிருந்து 3,674 ஆகவும், ஆஸ்துமா பாதிப்புகள் முன்பு 61 ஆக இருந்த நிலையில் 219 ஆகவும் உயர்ந்துள்ளன.
இதற்கிடையில், கண் வெண்படல அழற்சி பாதிப்புகள் முன்பு 157 ஆக இருந்த நிலையில், தற்போது 7% குறைந்து 146 ஆக உள்ளது.
வெப்பம் தொடர்பான 90 நோய்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை வெப்ப சோர்வு (71 பாதிப்புகள்), அதைத் தொடர்ந்து வெப்ப பக்கவாதம் (14 பாதிப்புகள்), வெப்ப தசைப்பிடிப்பு (ஐந்து பாதிப்புகள்) என்று சூல்கிப்லி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
