செய்திகள் மலேசியா
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்; வாழ்க்கைச் செலவைக் குறைப்பதிலும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
உலகில் இன்னும் நிலையற்றதாக நிலவும் புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையில் அரசாங்கம் குறிப்பாகவும் மேலும் விரிவாகவும் கவனம் செலுத்தும்.
மடானி அரசாங்க செய்தித் தொடர்பாளர்
ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் அவர், உலக கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிப்புறக் காரணிகளையும் வரவுசெலவுத் திட்டத் தயாரிப்பு ஆராயும்.
தற்போது தீர்க்கப்படாமல் உள்ள புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு மேலும் விரிவாகத் தீர்வு காண்பதை உறுதி செய்வதே 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் ஒட்டுமொத்தமாகக் கவனம் செலுத்தப்படும் என்று நான் காண்கிறேன்.
எனவே, பொதுவாக அளவுகோல்களில் ஒன்றாக இருக்கும் கச்சா எண்ணெய் விலையைக் கணக்கிடுவதைப் பொறுத்தவரை, அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
கோலாலம்பூர், புத்ராஜெயா, கூட்டரசுப் பிரதேசங்களின் தேசியக் கொடி பிரச்சாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு, அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
