நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்த வீடியோவில் இருப்பது நான் தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல: மலேசியப் பெண் விளக்கம்

கோலாலம்பூர்:

சமூகவலைதள பக்கங்களில், கருப்பு உடை அணிந்து பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும், 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது. 

இந்தப் பெண் தமிழ் நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என, சிலர் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.

இதனை மறுத்த கீர்த்தனா, 'சமூக வலைதள பக்கத்தில் வேகமாக பரவும் வீடியோவில் இருப்பது நான் இல்லை; அப்படியே, அது நானாக இருந்தாலும், அதிலென்ன தவறு இருக்கிறது என, கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், அந்த வீடியோவில் இருந்த பெண் ஒருவர் இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.

அந்த வீடியோவில் அவர், தான் மலேசியாவை சேர்ந்தவர் எனவும், வினோஷா எனவும் தெரிவித்து உள்ளார்.

என் பெயர் வினோஷா. நான் ஏன் இந்த வீடியோ செய்கிறேன் என்று முதலில் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகத்தில் பரவும் விஷயம் எனக்கு மன அழுத்தத்தை அளித்துள்ளது.

சமூக ஊடகத்தில் என்ன வீடியோ வைரலாக செல்கிறது என அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.

இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்த வீடியோவால் இரண்டு நாளில் நடக்கும் விஷயங்கள் மிகவும் மன அழுத்தத்தை கொடுக்கிறது.

அந்த வீடியோவில் என்ன தவறாக இருக்கிறது எனத் தெரியவில்லை.

மேலும் எனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset