செய்திகள் மலேசியா
தென் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்: மலேசியர்கள் சில நாட்களுக்குப் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்
கோத்தாபாரு:
தாய்லாந்தின் எல்லைக்குள் தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, மலேசியர்கள் தெற்கு தாய்லாந்திற்கான பயணத்தை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து - ஆசியாவின் ஹலால் வர்த்தக, சுற்றுலா சங்கத்தின் தலைவர் ஐடா ஓஜே,
இந்தச் சம்பவம் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைக்கவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நேற்று இரவு டஜன் கணக்கான குண்டு வெடிப்புகளும் தீ விபத்துகளும் நடந்தபோதிலும், நிகழ்ந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு, மலேசியர்கள் தெற்கு தாய்லாந்திற்கான தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
தொடர்பு கொண்டபோது, இறைவன் நாடினால், இந்த மாத இறுதிக்குள், பள்ளி விடுமுறை நாட்களில் மலேசியர்கள் பயணம் செய்வதற்கு நிலைமை பாதுகாப்பானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
