நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் 12-14 வயதுள்ள சிறார்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி

புது டெல்லி:

இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசு அதிகாரி தெரிவித்தார்.

தற்போது 18 வயதைக் கடந்தோருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரை குழுவின் கொரோனா செயற்குழு தலைவர் அரோரா கூறுகையில், " இந்தியாவில் 15-18 வயதுக்குள்பட்ட சுமார் 7.4 கோடி சிறார்கள் உள்ளனர். அவர்களில் இதுவரை 3.45 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது.

Zydus Covid vaccine for kids above 12 likely to be available by July-end or  August: Govt | India News - Times of India

ஜனவரி மாத இறுதியில் 15-18 வயதுக்குள்பட்ட அனைத்து சிறார்களுக்கும் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுவிடும். அவர்களுக்கு 28 நாள்கள் இடைவெளியில் 2ஆவது தவணை செலுத்தப்படும் என்பதால், பிப்ரவரி மாத இறுதிக்குள் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிடும்.

அதைத் தொடர்ந்து, 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறார்கள் உள்ளனர்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset