நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி

புது டெல்லி:

தில்லி திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நீரழிவு நோய் பாதிப்பு அதிகரித்ததால் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு  ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

கேஜரிவாலின் ரத்த சர்க்கரை அளவு 320-ஐ கடந்ததால் அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகள் மறுத்துவருவதால் அவரை சிறிது சிறிதாக கொல்ல ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

மாம்பழம் உள்ளிட்ட அதிக இனிப்புள்ள உணவுப் பொருட்களை கேஜரிவால் வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து ஜாமீன் பெற முயற்சிக்கிறார் என அமலாகத் துறை குற்றம்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை கேஜரிவால் தரப்பு மறுத்தது. இந்நிலையில்,  கேஜரிவால் தனியார் மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதிக்க முடியாது என்றும் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்த வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கேஜரிவாலுக்கு சர்க்கரை பாதிப்பு அதிகரித்ததால் செவ்வாய்க்கிழமை காலை இன்சுலின் வழங்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset