நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு

புது டெல்லி:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  வாரிசுரிமை வரியை அமல்படுத்தும் என்று பிரதமர் மோடி புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் நாட்டின் சொத்துகளை பகிர்ந்து அளித்துவிடும் என பிரதமர் மோடி இனத்துவேஷ கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மீண்டும் காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் மோடி.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சொத்து வாரிசுரிமை வரி விதிப்பை குறிப்பிட்டு பேசிய அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்தை முன்வைத்து, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களின் சொத்துகளை பிடிங்கி முஸ்லிம்களுக்கு அளித்துவிடும். வாழ்ந்தபின்பும், இறந்த பின்பும் வரி விதித்து சொத்துகளை அபகரித்துவிடும் என்றார் மோடி.

இந்நிலையில், தேர்தலில் மக்களின் கவனத்தை திசைதிருப்பவே, அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சொத்து வாரிசுரிமை வரி விவகாரத்தை பாஜக பெரிதுபடுத்துகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு மோடிக்கு தோல்வி பயம் எழுந்துவிட்டது என்று ப சிதம்பரம் உட்பட பல தலைவர்கள் பேசி வருகின்றனர். 

மோடி தொடர்ந்து இன துவேஷ கருத்துக்களை பொதுக்கூட்டங்களில் பேசி வந்தாலும் தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset