நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாக்களித்தால் குடிநீர்: கர்நாடக துணை முதல்வர் மீது வழக்கு

பெங்களூரு: 

காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தால் குடிநீர் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரகத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பு மக்களிடம் வாக்கு சேகரித்த சிவகுமார்,  2,510 வீடுகளில் 6,424 வாக்குகள் உள்ளன.

இந்த வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளருக்குஅளித்தால், காவிரி நதிநீரை குடிநீராக வழங்க  3 மாதங்களில் நடவடிக்கை எடுப்பேன் என்றார். இது தொடர்பாக விடியோவும் வெளியாகியது.

இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்திருந்ததையடுத்து, வாக்குக்கு குடிநீர் வாக்குறுதி அளித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset