நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து

கொல்கத்தா:

மேற்குவங்கத்தில் அரசு பள்ளிகளில் 25,753 ஆசிரியர்களின் பணி நியமனங்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மேற்குவங்கத்தில் 2014 ஆண்டில் போட்டித் தேர்வு நடத்தி 26 ஆயிரம் பேரை அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக அரசு நியமித்தது.

இதில் பலரிடம் தலா ரூ.15 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு பணி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில்  2022இல் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை சிபிஐ கைது செய்தது. ரூ.49 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவாங்சு பஸாக், முகமது ஷப்பார் ரஷிதி ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், அரசு ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 25,753 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்படுகிறது.

அவர்கள் இதுவரை பெற்ற ஊதியத்தை, ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் 6 வாரங்களுக்குள் அரசுக்கு திருப்பி வழங்க வேண்டும்.

2016-ம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற 25,753 பேரின் தேர்வுத் தாள்களை மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். தகுதி அடிப்படையில் புதிய ஆசிரியர்கள், அலுவலர்களை பணியில் நியமிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset