நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்

ஜெய்பூர்:

பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்கள் குறித்து இனத்துவேஷ கருத்து தெரிவித்த பிரதமர் மோடியை விமர்சித்த ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் உஸ்மான் கனி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிரதமரின் இனத்துவேஷ பேச்சுக்கு எதிராக உஸ்மான் கனி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில் பிரதமரின் இந்த இனத்துவேஷ பேச்சால் ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், 4 தொகுதிகளில் பாஜக தோல்வியடைய வாய்ப்புள்ளது என்றார்.

மேலும், பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

பாஜக மீது ஜாட் சமூகத்தினர் கோபத்தில் உள்ளனர். சில தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக அவர்கள் வாக்களித்துள்ளனர். நான் இவ்வாறு பேசுவது தொடர்பாக கட்சி எந்த நடவடிக்கையும் எடுத்தாலும் எனக்கு அச்சமில்லை என்றார் உஸ்மான் கனி.
கனியின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால் உஸ்மான் கனி பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset