செய்திகள் மலேசியா
14 வயது மாணவியின் மரணம் தொடர்பான பகடிவதை குற்றச்சாட்டுகள்; போலிஸ் விசாரித்து வருகிறது: ஃபாடில்
கோலாலம்பூர்:
14 வயது மாணவியின் மரணம் தொடர்பான பகடிவதை குற்றச்சாட்டுகள் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை கூறினார்.
கடந்த வாரம் கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் 14 வயது இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில், குற்றச்செயல் நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.
ஜாலான் லங்காவியில் உள்ள தங்கள் அடுக்குமாடி வீட்டில் தனது மகளைக் கண்ட அவரது தாய்,
ஆகஸ்ட் 18 அன்று அதிகாலை 2 மணியளவில்.பாதிக்கப்பட்ட மாணவியை கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், அதிகாலை 2.25 மணியளவில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தாயாரிடமிருந்து ஆகஸ்ட் 19 அன்று காவல்துறைக்கு புகார் கிடைத்ததை அடுத்து, குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதாக ஃபாடில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 10:43 pm
கேசியா நிஷாவிற்கு நீதி கிடைக்க அவரின் குடும்பத்தாருக்கு மஇகா துணை நிற்கும்: அண்ட்ரூ டேவிட்
August 22, 2026, 4:26 pm
மலேசியாவில் புகைமூட்டம் மோசமாகி வருகிறது
August 22, 2026, 11:28 am
பகாங் ரொம்பினில் பயங்கர சாலை விபத்து: ஓர் ஆசிரியரும் அவரின் மகனும் பலி
August 22, 2026, 10:07 am
தபோங் ஹாஜி வாரியத்தின் வழக்கு விசாரணை: ஐந்து விசாரணை அறிக்கைகள் திறப்பு
August 22, 2026, 10:07 am
மாணவி கேசியா நிஷா மரணம்; சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்: ஆண்ட்ரூ டேவிட்
August 22, 2026, 10:06 am
