நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங் மக்களிடையே திறனை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்: இயோ பீ யின்

பூச்சோங்:

பூச்சோங் மக்களிடையே திறனை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் இதனை கூறினார்.

மைடாவின் ஏற்பாட்டில் செயற்கை நுண்ணறிவு பட்டறை இன்று பூச்சோங் 14 மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 400 பேர் இந்த பட்டறையில் கலந்து கொண்டனர்.

இளைஞர்களை தவிர்த்து மூத்த மக்களும் இந்த பட்டறையில் கலந்து கொண்டது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

இப்பட்டறை மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது. இதன் மூலம் மொத்தமாக 900த்திற்கும் மேற்பட்டோர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

மக்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலான இதுபோன்ற பட்டறைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

இதற்கு பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது முழு ஆதரவை வழங்குவேன் என்று அவர் கூறினார்.

இதனிடையே இந்த செயற்கை நுண்ணறிவு பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் இப்பட்டறை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து ஏபிஎஸ் மஞ்சாவின் தலைமை இயக்குநரும் ஆலயத் தலைவருமான டத்தோ ஏபி சிவம், லாவ்ரல்சோப்ஃட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முத்துவேல் உட்பட அனைவருக்கும் நன்றி என்று அதன் ஏற்பாட்டாளரான ராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset