நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னல் எஃப்.எம் ‘ மதிப்புயர்வு விழா: உணர்வின் ஹீரோ’ விருது விழா; 23 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது 

பத்து கேவ்ஸ்: 

“மனங்களைத் தூண்டும் சமூக பங்களிப்பு, சமூகத்தை ஊக்குவிக்கும் வீரர்” என்ற கருப்பொருளில் மின்னல் எஃப்.எம் ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டுக்கான ‘உணர்வின் ஹீரோ’ பாராட்டு விழா இன்று சிலாங்கூர், பத்து கேவ்ஸ் ஷெங்கா மாநாட்டு மையத்தில் நடைபெற்றது

சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வரும் சமூகத் தலைவர்கள், நண்பர்கள், வியூக பங்காளிகள், தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

மின்னல் எஃப்.எம் வானொலிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நபர்கள் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர்களின் சேவைகளைப் பாராட்டுவதும் இவ்விழாவின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

மேலும், முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.
சமூகத்திற்காக அசாதாரண பங்களிப்புகளை வழங்கி, எதிர்பார்ப்பின்றி மக்களுக்கு உதவி செய்து வரும் 20 ‘உணர்வின் ஹீரோக்கள்’ இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு, எதிர்கால தலைமுறையினருக்கு முன்மாதிரியாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

விருது பெற்ற ஒவ்வொருவரின் சமூக சேவையும் அங்கீகரிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சமூக நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர்களின் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் அமைந்தது.

நிகழ்ச்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றதுடன், விருது பெற்ற ‘உணர்வின் ஹீரோக்களுக்கு’ சிறப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது. மின்னல் எஃப்.எம் நிறுவனத்தின் வியூக நண்பர்கள் மற்றும் பங்காளிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மின்னல் எஃப்.எம் ஒலிபரப்பின் தலைமை இயக்குநர் அஷ்வத் பின் இஸ்மாயில், CAPTIAL A குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டத்தோஸ்ரீ தோனி பெர்னாண்டஸ், MINNAL FM தலைவர் குமரன் சுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset