நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜி வாரியத்தின் வழக்கு விசாரணை: ஐந்து விசாரணை அறிக்கைகள் திறப்பு 

கோலாலம்பூர்: 

அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டது போல தபோங் ஹாஜி வாரியத்தின் வழக்கு விசாரணை தொடர்பாக போலிஸ் ஐந்து விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது. 

இந்த தகவலை புக்கிட் அமான் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவு இயக்குநர் ருஸ்டி இசா கூறினார். 

விசாரணைக்கு உதவும் பொருட்டு இதுவரை 127 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தினார். 

அதுமட்டுமல்லாமல், மேலதிக வாக்குமூலங்களைப் பெற சாட்சியாளர்கள் விரைவில் அழைக்கப்படுவார்கள் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார். 

இந்த விசாரணையானது 1965 தபோங் ஹாஜி சட்டம், 1965 நிறுவன சட்டம் மற்றும் 2001 கள்ளப்பண பரிமாற்றம் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதாக அவர் சொன்னார். 

அனைத்து விசாரணைகளும் சுயேட்சையாகவும் நேர்மையாகவும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதை போலிஸ் உறுதி செய்யும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset