செய்திகள் மலேசியா
சரவாக் மாநிலத்தின் 10 இடங்களில் IPU காற்றின் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தின் 10 இடங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூச்சிங்கில் 181, சமரஹான் 178, ஶ்ரீ அமான் 174, சரிகேய் 171 காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது
சரவாக்கில் செரியான் பகுதியில் அதிகமாக 191 காற்றின் தரம் பதிவு செய்யப்பட்டது
தீபகற்ப மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் புக்கிட் ரம்பாய் பகுதியில் காற்றின் தர குறியீடு 140ஆக பதிவாகியது.
முன்னதாக, சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் தீவிரமடைந்ததால் அம்மாநிலத்தில் செயல்பட்டு வந்த 591 பள்ளிகளும் மூடப்படுவதாக நேற்று மாநில கல்வி இலாகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
IPU காற்றின் தர குறியீடு 0 முதல் 50 வரை நல்ல காற்றின் தரத்தையும் 51 முதல் 100 வரை மிதமான தரத்தையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற தரத்தையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற தரத்தையும் குறிக்கிறது.
மேலும், 300-க்கு மேற்பட்ட API அளவு அபாயகரமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:43 pm
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
