செய்திகள் மலேசியா
மாணவி கேசியா நிஷா மரணம்; சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்: ஆண்ட்ரூ டேவிட்
கோலாலம்பூர்:
மாணவி கேசியா நிஷா மரண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
மஇகா பணிப்படையின் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் இதனை வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் அவசர முடிவெடுக்காமல் முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
இந்த விவகாரத்தை எதிர்த்துப் போராட மஇகா பணிப்படை முழு ஒத்துழைப்பு நல்கத் தயாராக உள்ளது.
அத்துடன், காலஞ்சென்ற மாணவி கேசியா நிஷாவின் குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவியை வழங்கவும் தயாராக இருக்கிறோம்.
டானாவ் கோத்த இடைப்பள்ளியின் படிவம் 2 மாணவியின் மரணத்தை மஇகா பணிப்படை மிகவும் தீவிரமாகக் கருதுவதோடு, ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.
பகடிவதை, இன ரீதியிலான அவதூறுகள், பள்ளியின் சூழல் மற்றும் இதர தொடர்புடைய காரணிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் முழுமையாக எந்தவொரு முன்முடிவும் இன்றி விசாரிக்கப்பட வேண்டும்.
பெறப்பட்ட தகவல்களின்படி, தனக்கு எதிராக வகுப்பறை மாணவர் ஒருவர் இன ரீதியிலான சொற்கள் உட்பட அவதூறான வார்த்தைகளைப் பேசியது குறித்து சம்பந்தப்பட்ட மாணவி ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக உள்முறை விசாரணை நடத்தியபோதிலும், போதுமான சான்றுகள் இல்லை எனக் கூறி, அது கேலிவதை சம்பவமாக உறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளியின் விசாரணையில் புகார் உறுதி செய்யப்படவில்லை என்பதற்காக, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தானாக முடிவெடுத்துவிட முடியாது என மஇகா பணிப்படை வலியுறுத்துகிறது.
இந்த மரணத்திற்குப் பிறகு, சாட்சிகளின் வாக்குமூலங்கள், புகார்கள் தொடர்பான பதிவுகள், பள்ளி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்கு உதவக்கூடிய பிற ஆதாரங்களைக் கொண்டு, அதிகாரிகள் உண்மையில் நடந்தது என்ன என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 10:47 pm
14 வயது மாணவியின் மரணம் தொடர்பான பகடிவதை குற்றச்சாட்டுகள்; போலிஸ் விசாரித்து வருகிறது: ஃபாடில்
August 22, 2026, 10:43 pm
கேசியா நிஷாவிற்கு நீதி கிடைக்க அவரின் குடும்பத்தாருக்கு மஇகா துணை நிற்கும்: அண்ட்ரூ டேவிட்
August 22, 2026, 4:26 pm
மலேசியாவில் புகைமூட்டம் மோசமாகி வருகிறது
August 22, 2026, 11:28 am
பகாங் ரொம்பினில் பயங்கர சாலை விபத்து: ஓர் ஆசிரியரும் அவரின் மகனும் பலி
August 22, 2026, 10:07 am
தபோங் ஹாஜி வாரியத்தின் வழக்கு விசாரணை: ஐந்து விசாரணை அறிக்கைகள் திறப்பு
August 22, 2026, 10:06 am
