நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேசியா நிஷாவிற்கு நீதி கிடைக்க அவரின் குடும்பத்தாருக்கு மஇகா துணை நிற்கும்: அண்ட்ரூ டேவிட்

கோலாலம்பூர்:

கேசியா நிஷாவிற்கு நீதி கிடைக்க அவரின் குடும்பத்தாருக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்.

மஇகா பணிப்படை தலைவர் அண்ட்ரூ டேவிட் இதனை கூறினார்.

டானாவ் கோத்த இடைப்பள்ளியின் படிவம் 2 மாணவியின் மரணத்தை மஇகா பணிப்படை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது.

மேலும் ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். 

பகடிவதை, இன ரீதியிலான அவதூறுகள், பள்ளியின் சூழல் மற்றும் இதர தொடர்புடைய காரணிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் முழுமையாக எந்தவொரு முன்முடிவும் இன்றி விசாரிக்கப்பட வேண்டும்.

மாணவி கேசியா நிஷா மரண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

மேலும் காலஞ்சென்ற மாணவி கேசியா நிஷாவின் குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவியை  வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

இன்று மாலை மாணவி கேசியா நிஷாவின் வீட்டிற்கு சென்ற அண்ட்ரூ டேவிட் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset