நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் புகைமூட்டம் மோசமாகி வருகிறது

புத்ராஜெயா:

புகைமூட்டம் பரவுவதைத் தடுக்க ஆசியான் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசியா கேட்டுக்கொண்டிருக்கிறது.

சுற்றுப்புற அமைச்சர் ஜோசஃப் குருப் (Joseph Kurup) ஆசியான் வட்டாரம் 2030ஆம் ஆண்டுக்குள் புகைமூட்டம் இல்லாத பகுதியாக வேண்டும் என்பதில் மலேசியா தொடர்ந்து உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

மலேசியா அதன் நிலைப்பாடு குறித்து ஆசியான் தலைமைச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹோர்னுக்கு (Kao Kim Hourn) அதிகாரபூர்வச் செய்தி அனுப்பியிருப்பதாக அவர் சொன்னார்.

சரவாக் மாநிலத்திலும், மலாக்கா மாநிலத்திலும் இன்று காலை மோசமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவானது.

மலேசியாவில் 11 பகுதிகளில் காற்று மோசமடைந்துள்ளது.

Okay, The Haze Is Back. Why Is It An Annual Thing Again?

மலாக்காவில் புக்கிட் ரம்பாய் (Bukit Rambai) பகுதியில் தூய்மைக்கேட்டுக் குறியீடு 140 புள்ளி பதிவாகியுள்ளது,.

எதிர்வரும் மாதங்களில் வறட்சி தொடரும், நிலைமை மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset