நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கவியல் உருமாற்றம், கிராண்ட், கடனுதவித் திட்டங்கள் குறித்து பெண் வர்த்தகர்களிடையே விழிப்புணர்வு அவசியம்: மோகனா

கோலாலம்பூர்:
இலக்கவியல் உருமாற்றம், கிராண்ட், கடனுதவித் திட்டங்கள் குறித்து பெண் வர்த்தகர்களிடையே விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும்.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் துணைத் தலைவர் மோகனா கூறினார்.

பெண் புத்தாக்க தொழில்முனைவோர் அமைப்பின் தோற்றுநர் ஜுன் ஹமித் ஏற்பாட்டில் வர்த்தக சந்திப்புக் கூட்டம் 2.0 இன்று நடைபெற்றது.

வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ள பெண்கள் திரளாக இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க வேண்டும் என அரசாங்கம் பல்வேறு கிராண்ட், கடனுதவித் திட்டங்களை அமல்படுத்தி உள்ளது.

இத்திட்டங்கள் முறையாக வர்த்தகர்களிடையே சென்று சேர வேண்டும் என அது குறித்து விளக்கங்களை நான் தந்தேன்.

அதே வேளையில் வர்த்தகத்தில் இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு உருமாற்றங்கள் குறித்து புவனா விளக்கம் தந்தார்.

இது பங்கேற்றவர்களுக்கு பெரும் பயனாக அமைந்தது என்று மோகனா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset