செய்திகள் கலைகள்
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
பெய்ஜிங்:
சீனாவில் தரமற்ற காட்சிகளுக்காகக் கேலி செய்யப்பட்ட குறைந்த செலவிலான திரைப்படம் திடீர் வெற்றிபெற்றுள்ளது.
‘நியூ லாய்’ (Niu Lai) என்ற அந்த உயிரோவியப் (Animation) படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியானது. முதல் வாரத்தில் சுமார் 7,000 யுவான் மட்டுமே வசூலித்தது.
பின்னர் இணையத்தில் படம் வேகமாகப் பிரபலமடைந்தது. அதன் வசூல் 33 மில்லியன் யுவானாக உயர்ந்ததாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன.
தாயும் மகனும் இணைந்து படத்தை உருவாக்கியுள்ளனர். ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு காட்சியாக அவர்கள் உருவாக்கினர்.
நியூ லாய் என்ற கன்றுக்குட்டியின் பயணத்தைப் படம் சொல்கிறது.
படத்தின் முப்பரிமாணக் கதாபாத்திரங்களின் அசைவுகள் இயல்பாக இல்லை. உரையாடல்களும் தடுமாற்றமாக இருப்பதாகப் பலர் கருதினர். ஆனால் அதுவே படத்தின் ஈர்ப்பாக மாறியது.
படத்துக்குப் பெரிதாக விளம்பரங்கள் இல்லை. இருந்தாலும் படத்தின் மஞ்சள் நிற மாட்டைக் கொண்ட சட்டைகள், பொம்மைகள், சாவிக்கொத்துகள் போன்ற பொருள்கள் இணையத்தில் விற்பனைக்கு வந்துவிட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
