நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெற்கு தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் ஒரே நேரத்தில் நடந்த தாக்குதல்களால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: கிளந்தான் காவல்துறைத் தலைவர்

கோத்தபாரு:

தெற்கு தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என கிளந்தான் காவல்துறைத் தலைவர்  டத்தோ முஹம்மத் யூசுஃல் மமாட் (Datuk Mohd Yusoff Mamat)
தெரிவித்தாலும், அப்பகுதிக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாகாணங்களில் 51 சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்துக்குச் செல்லும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தண்டனைகளைத் தவிர்க்க, மலேசிய ஓட்டுநர்கள் உள்ளூர் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுமாறு வலியுறுத்தி, தாய்லாந்து அதிகாரிகள் பாதுகாப்பு,  போக்குவரத்து அமலாக்கத்தை அதிகரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset