நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

ஷாஆலம்:

ஷா ஆலாம், புக்கிட் கமுனிங் 8ஆவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் 56ஆவது தீமிதித் திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் ஆறுமுகம் அப்பாசாமி, டத்தோ கணேசன், டத்தோ ஜோ சரவணன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன், வழக்கறிஞர் கோகிலா  உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இன்று காலை 7.00 மணிக்கு ஆலய நித்திய பூஜையுடன் ஆலயத் திருவிழா தொடங்கியது.

பின்னர் கரகம் பாலித்து பக்தர்கள் பால்குடங்கள் காவடிகள் ஏந்தி தீமிதியில் இறங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.

மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டது.

இதனிடையே இரவு 7.00 மணிக்கு ஆலய நித்திய பூஜை, அம்பாள் உள்வீதி உலா வருதல், பொன்னூஞ்சல் வைபவம் ஆகியவை இடம் பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அம்சமாக ஆலயம் சார்பில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், வசதிக் குறைந்த மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset