செய்திகள் மலேசியா
செந்தூல் வட்டாரங்களில் தேசியக் கொடியை வழங்கி தேசியப்பற்றை மிளிரச் செய்த டத்தோ சைமன் சுரேஷ்
கோலாலம்பூர்:
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நன்னாளை எட்டியுள்ள வேளையில், நாட்டின் தேசிய ஒற்றுமையையும் ஆழமான தேசப்பற்றையும் புதிய வீச்சோடு வலுப்படுத்தும் நோக்கில், வாவாசான் நெகாரா கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ சைமன் சுரேஷ் செந்தூல் சந்தைப் பகுதி மக்களிடையே தேசியக் கொடிகளை வழங்கி தேச உணர்வை மிளிரச் செய்துள்ளார்.
வரவிருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில், செந்தூல் பசார் வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேசியக் கொடிகள் உற்சாகமாக வழங்கப்பட்டன.
பொதுமக்கள் தங்களின் இல்லங்களிலும், வணிக வளாகங்களிலும், வாகனங்களிலும் நமது தேசியக் கொடியை பெருமையோடு பறக்கவிட்டு, நாட்டின் மீதான அளப்பரிய அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வின் போது ஊடகங்களிடம் பேசிய டத்தோ சைமன் சுரேஷ், “தேசப்பற்று என்பது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கோ அல்லது அமைப்பிற்கோ மட்டும் உரித்தான கடமை அல்ல.
அது இனம், மதம், பின்னணி ஆகிய அனைத்து எல்லைகளையும் கடந்து, மலேசியர் ஒவ்வொருவரையும் ஒரே குடையின் கீழ் பிணைக்கும் உன்னதமான உணர்வு.
தேசியக் கொடி என்பது வெறும் துணி அல்ல; அது நமது அடையாளம், கௌரவம், ஒற்றுமை மற்றும் இந்த நாட்டின் மீது நாம் கொண்டுள்ள ஆழமான பற்றின் பிரதியை வெளிப்படுத்தும் தாரக மந்திரம்.
நாட்டின் அமைதியையும் நற்புறவையும் கட்டிக்காப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய பொறுப்பாகும்” என ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து செயல்படாமல், நேரடியாக மக்களிடம் சென்று களத்தில் இறங்கி உரையாடுவதே உண்மையான மக்கள் சேவை என்றும், அதன் மூலமே அடித்தட்டு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் கருத்துகளையும் நேரில் கேட்டறிய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
டொயோட்டா அல்பார்ட் காரில் ஆடவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
August 23, 2026, 8:42 pm
புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
August 23, 2026, 4:15 pm
