
செய்திகள் மலேசியா
தைப்பூச கட்டுப்பாடுகளில் இந்திய சமுதாயம் அதிருப்தி: டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆதங்கம்
கோலாலம்பூர்:
அரசாங்கம் அறிவித்த தைப்பூச எஸ்.ஓ.பி. கட்டுப்பாடுகளால் இந்திய சமுதாயம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக மனிதவள அமைச்சரும் ம.இ.கா. துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆதங்கத்துடன் கூறினார்.
தைப்பூச விழா பத்துமலையில் மிதமான அளவில் கொண்டாடப்பட்டது.
ஆயிரக் கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை வணங்கி சென்றனர்.
அதே வேளையில் காவடிக்கு அனுமதி இல்லாத நிலையில் பக்தர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
காலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்று உரையாற்றினார்.
நானும் ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமாவும் தைப்பூச விழா முழுமையாக நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
ஆனால், கட்டுப்பாடுகளை முடிவு செய்தது சுகாதார அமைச்சு. அந்த அமைச்சுக்கு தான் அனைத்து அதிகாரமும் உண்டு.
ஆனால், இவ்விவகாரத்தில் என்னையும் ஹலிமாவையும் சாடி வருகின்றர்.
சமுதாயம் எழுப்பும் ஒரு சில கேள்விகளும் நியாயமாகத் தான் உள்ளது.
குறிப்பாக ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் பேரங்காடிகள், பாசார் மாலாம், பாசார் பாகி என அனைத்துக்கும் அனுமதி இருக்கும் பட்சத்தில் தைப்பூசத்திற்கு மட்டும் ஏன் இந்த தடை விதிக்கப்பட்டது.
இது அரசாங்கத்திற்கு புரிய வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது.
இதுவே என்னுடைய கோரிக்கை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
பத்துமலை தைப்பூசத்திற்கு விதிக்கப்பட்ட எஸ்ஒபி நாளை 19 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
அதன் பின்னர் நானும் பத்துமலை முருகனுக்கு காவடி எடுத்து காணிக்கை செலுத்துவேன் என்று டத்தோ ஸ்ரீ எம் சரவணன் இன்று பத்துமலை திருத்தலத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் பத்துமலை தைப்பூசத்தில் காவடிகள் எடுத்து வருகிறேன்.
ஆனால் தைப்பூசத்தில் பால்குடம் எடுக்க அனுமதி அளித்துள்ளார்கள். ஆகவே காவடிகள் எடுக்க அனுமதி இல்லை என்று எஸ்ஒபி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆகவே 19 ஆம் தேதிக்கு பிறகு நானும் காவடி எடுப்பேன். பக்தர்களும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm