நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸி மேஜிக்: தந்தை மறைவுக்குப் பிறகு முதல் கோல்

நியூயார்க்:

எம்எல்எஸ் தொடரில் இந்தர்மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது தந்தை மறைவுக்குப் பிறகு முதல் கோல் அடித்து அசத்தியுள்ளார்.

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியும் பிலடெல்பியா யூனியன் அணியும் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமநிலையில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 26ஆவது நிமிடத்தில் 12 அடி தூரத்தில் இருந்து அசத்தலான கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.

பின்னர், 58ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் கோல் அடித்து சமநிலைப்படுத்தினர்.

சமீபத்தில் அவரது தந்தை மறைவுக்குப் பிறகு லீக் கிண்ண போட்டியில் அந்த அணி தோல்வியுற்றது. 

பின்னர் எம்எல்எஸ் தொடரில் முதல் இடத்துக்கான முக்கியமான போட்டியில் நாஷ்வில் அணியிடம் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் 21ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் பிரி அசிஸ்ட் மூலமாக முதல் கோல் வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சீசனில் மெஸ்ஸி 13 கோல்கள், 9 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார். 

ஒட்டுமொத்தமாக 922 கோல்கள், 420 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset