செய்திகள் விளையாட்டு
ஆசியான் கிண்ணம்: ஹரிமாவ் மலாயா அணியின் கனவு தகர்ந்து போனது
கோலாலம்பூர்:
நடப்புச் சாம்பியனான வியட்நாமிடம் மொத்தத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஆசியான் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற ஹரிமாவ் மலாயா அணியின் கனவு தகர்ந்து போனது.
கோலாலம்பூர் கால்பந்து அரங்கில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து, மைடின் அரங்கில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தான் செங் ஹோ தலைமையிலான அணியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட மீள் வருகை கைகூடவில்லை.
அவர்கள் மீண்டும் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தனர்.
இந்த முடிவு, கடந்த பதிப்பின் இறுதிப் போட்டியின் மறுபதிப்பாக அமைந்தது. இதில் வியட்நாம், தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
தாய்லாந்து, சிங்கப்பூரை மொத்தத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஆசியான் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 9:40 am
சுக்மா மகளிர் கால்பந்து போட்டி: சிலாங்கூர் அணி தங்கம் வென்றது
August 19, 2026, 9:52 am
மெஸ்ஸி அமைதி காத்து வருகிறார்: ஹோயோஸ்
August 19, 2026, 9:48 am
முசியாலா இரண்டாவது முறையாக மயங்கி விழுந்தார்
August 18, 2026, 11:19 pm
சுக்மா மகளிர் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணி
August 18, 2026, 11:18 pm
சுக்மா கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கெடாவும் பெண்கள் பிரிவில் சிலாங்கூரும் தங்கப்பதக்கம் வென்றன
August 18, 2026, 9:04 am
கால்பந்தில் எனது கடைசி ஆண்டு: ரொனால்டோ
August 17, 2026, 5:09 pm
