நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மா போட்டியில் ஜொகூர் வீராங்கனை எஸ். கீதா சாதனை: 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று அசத்தல் 

செர்டாங்: 

2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் ஜொகூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து மகளிர்க்கான  800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்து புதிய சாதனை படைத்தார் வீராங்கனை எஸ். கீதா 

மலேசிய புத்ரா பல்கலைக்கழக (UPM) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 21 வயதான கீதா 2 நிமிடங்கள் 17.690 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் 2024 சரவாக் சுக்மா போட்டியில் தான் வென்ற தங்கப் பதக்கத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டதோடு, தனது கடைசி சுக்மா பயணத்தையும் நிறைவு செய்துள்ளார்.

இப்பிரிவில் சபா வீராங்கனை நூர் ஷிஃபா ரைஷா  வெள்ளியையும், ஜொகூரின் ரோஸ்னானி மகாமத் வெண்கலத்தையும் பெற்றனர்.

கடந்த ஆண்டு இடது கெண்டைக்கால் தசையில் ஏற்பட்ட 6 செ.மீ கிழிவு காரணமாக நடப்பதற்குக்கூட ஊன்றுகோலைப் பயன்படுத்திய கீதா, தீவிர பிசியோதெரபி மற்றும் 'PRP' சிகிச்சைகளுக்குப் பிறகே களத்திற்குத் திரும்பினார்.

குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் முகமது ஜிரோனி ரிடுவானின் ஆதரவே தனது மீட்சிக்குக் காரணம் எனக் கூறிய கீதா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய சீ விளையாட்டுகளுக்குத் தகுதி பெறுவதையே தனது அடுத்தகட்ட இலக்காகக் கொண்டுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset